பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர்சிங்கை இந்தியாவில் தனது புதிய பிராண்ட் தூதராக இணைப்பதை, உலகின் நம்பர் 1 இருமல் மற்றும் சளி மருந்து பிராண்டான விக்ஸ், அறிவித்துள்ளது.
கோ-கெட்டர் ரன்வீர், அவரது வெகுஜன ஈர்ப்பு மற்றும் வலுவான இளைஞர்களின் இ¬ ணப்புடன், அவரது நகைச்சுவையான பாணி மற்றும் அவர் நினைத்ததை அடைவதற்கான அவரது அசைக்க முடி யாத வைராக்கியம் ஆகியவற்றால் பாராட்டப்படுகிறார்.
ரன்வீரின் வெளிப்படை யான ஆளுமை மற்றும் கூலான அணுகுமுறையை பயன்படுத்தி, கிச்கிச் சிலிருந்து விடைபெறவும், உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் இளைய தலைமுறையினரை வலி யுறுத்தும் அதன் செய்தியை வலுப்படுத்துவதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய கூட்டணி பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ரன்வீர்சிங், விக்ஸ் எப்போதுமே எனது வீட்டில் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. தொ ண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற நான் அடிக்கடி விக்ஸ் இருமல் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தினேன்.
விக்ஸ் எனது குழந்தைப் பருவத் தின் ஒரு பகுதியாக இருந்து இன்று வரை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் தொடர்கிறது.
இளைஞர்களை ‘கிச்கிச்’ தொல்லைகள் இல்லாமல் பேசவும், உலகை அவர்களின் சிறந்த வடிவில் எதிர்கொள்ள இந்த கூட்டணியின் மூலம் எங்களால் ஒன்றாக ஊக்கப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
ப்ராக்டர் அண்ட் கேம்பிள், நிறுவனத்தின் பர்சனல் ஹெல்த்கேர், மூத்த இயக்குநரும், பிரிவுத் தலைவருமான சாஹில் சேத்தி பேசுகையில், கிச்கிச்சை விடுவிப்பதற்காகவும், தொண்டை எரிச்சல் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கும் நாடு முழு வதும் அறியப்படுகிறது.
எங்கள் தூதராக ரன்வீர்சிங் கையெழுத்திட்டது இந்த நெறிமுறையை நிறைவு செய்கிறது. ஏனெனில் அவர் தனது உற்சாக குணம் மற்றும் புகழால் பலருக்கு உத்வேகமாக இருக்கிறார்.
இந்த கூட்டாண்மை மூலம், விக்ஸ் இருமல் சொட்டுகளை சுற்றியுள்ள நுகர்வோருடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதையும், தொண்டை புண் எரிச்சலைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.



