Homeபிற செய்திகள்‘விக்ரம் வேதா’ திரில்லர் உடன் கைகோர்த்த மொபில்

‘விக்ரம் வேதா’ திரில்லர் உடன் கைகோர்த்த மொபில்

இந்தியாவின் முன்னணி இன்ஜின் ஆயில் பிராண்டான ‘மொபில்’ (Mobil), 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘விக்ரம் வேதா’ உடன் கைகோர்த்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள படத்துடன், தனது கூட்டாண்மையின் மூலம், மொபில் அதன் பிராண்ட் மதிப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விக்ரம் வேதா புஷ்கர்-காயத்ரி எழுதி இயக்கியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும்.

விக்ரம் வேதாவின் கதை முழுக்க முழுக்க திருப்பங்கள் நிறைந்தது. ஒரு உறுதியான காவல்துறை அதிகாரியான விக்ரம் (சைஃப் அலி கான்) ஒரு பயங்கரமான கேங்க்ஸ்டர் வேதாவை (ஹிருத்திக் ரோஷன்) கண்காணித்துப் பிடிக்க முயல்கிறார். ஒரு பூனை-எலி துரத்தலுக்குச் சமமான இதில், ஒரு தலைசிறந்த கதை சொல்லியான வேதா, சிந்தனையைத் தூண்டும் தார்மீக தெளிவின்மைகளுக்கு இட்டுச் செல்லும் தொடர் கதைகளின் மூலம் விக்ரமுக்கு உதவுகிறார்.

இக்கூட்டாண்மை குறித்து, எக்ஸான்மொபில் (ExxonMobil) லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சிஇஓ விபின் ராணா கூறியதாவது: மொழி மற்றும் புவியியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே எதிரொலிக்கும் அழுத்தமான கதைகளை முன்வைக்கும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களுடன் கூட்டு சேர்வது, வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும் எங்களின் வித்தியாசமான பலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்குமான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சவால்களை எதிர்கொண்டாலும், வாழ்க்கையில் சரியான தேர்வுகளையே எப்போதும் மேற்கொள்ள வேண்டும் என்பதே படத்தின் மையக்கரு.

வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு எது சிறந்தது என்பதை அறிவது அவர்களின் வாகனங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமாகும். படத்துடனான எங்கள் தொடர்பு மூலம், சரியான தேர்வுகளை செய்வதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img