ராமநாதபுரம் மாவட் டம், ராமேஸ்வரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய் வாளராக பணிபுரிந்துவந் தவர் கருப்பையா.
இவர் கடந்த 24.10.2020ம் தேதியன்று தேவர்ஜெ யந்தி தொடர் பான அலுவலாக சத்திரக் குடி அருகே செல்லும் போது தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் படு காயமடைந்தார்.
மதுரை தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டவர் கடந்த 19.11.2020-ம் தேதியன்று சிகிச்சை பல னின்றி உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், சார்பு ஆய்வாளர் கருப்பையா தனது சம்பள கணக்கை பாரத ஸ்டேட் வங்கியில் வைத்திருந்ததுடன், Police Salary Packageஎனும் விபத்து காப் பீட்டு திட்டத்தின் கீழ் இணைத்திருந்தார்.
சார்பு ஆய்வாளர் தனது சம்பள கணக்கை விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைத்ததன் பயனாக, மேற்படி திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்த காவல்துறையினருக்கு வழங்கப்படும் ரூ.30 லட் சத்துக்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் முன்னிலையில் ராமநாதபுரம் ஸ்டேட் வங்கி கிளையின் உதவி பொது மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேலாளர் சரவணக்குமார் ஆகியோர் நேற்று (18ம் தேதி) மாவட்ட காவல் அலுவலகத்தில் மறைந்த சார்பு ஆய்வாளர் கருப் பையாவின் மனைவி சண் முகவள்ளி மற்றும் மகன் பாலமுருகனிடம் நேரில் வழங்கினார்கள்.
சார்பு ஆய்வாளரின் இறப்பு தொடர்பான ஆவணங்களை வங்கியில் அளித்து விபத்து காப்பீட்டு தொகை கிடை க்க தொடர் முயற்சி மேற்கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியசை (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கார்த்திக் வெகுவாக பாராட்டினார்.
மேலும் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுனர்களும் தமது சம் பள கணக்கை எஸ்பிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி ஆகிய வங்கிகளில் வழங்கப்படும் Police Salary Package விபத்து காப்பீட்டு திட்ட சேவையின் கீழ் இணைத்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.



