வருமான வரி படிவம் தாக் கல் செய்வதற்கான தேதியை டிசம்பர் 31-ல் இருந்து மார்ச் 31 வரை நீட்டிக்க, தேசிய வரி ஆலோசகர்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ரவிச் சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: வருமானவரி ரிட்டர்ன் இந்த மாதம் 31-ம் தேதி தாக் கல் செய்ய கடைசி நாள்.
இதில் சம்பளதாரர்கள் ஓய்வூதியதாரர்கள் தணிக்கை செய்யப்படாத அனைத்து வரி செலுத்துபவர்கள் மற்றும் செலுத் தாதவர்கள் அடங்குவர். அதேபோன்று தணிக்கை செய்யப்படக்கூடிய நபர்களுக்கு வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் 15/2/2022 (குறிப்பாக ஆண்டு மொத்த வியாபாரம் தொகையில் ஒரு கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்).
தொழில் நுட்பத்தால் வரி படிவம் தாக்கல் செய்பவர்கள், புதிய அனுப வத்தால் தடுமாறுகிறார்கள். புதிய இணையதளத்தை ஏப்ரல் மாதமே நடைமுறைக்கு கொண்டு வந்து டிசம்பர் மாதத்திற்கு இறுதிநாள் காலநீட்டிப்பு செய் தால் நன்மை தரும்.
ஆனால் புதிய தொழில்நுட்பமே நவம்பர் மாதம் முதல் கொண்டு செயல்பட ஆரம்பித்தது. எனவே டிசம்பருக்குள் இந்த வருமான வரி படிவம் தாக்கல் அனைவராலும் முடியாது.
தொழில்நுட்ப காலதாமதத்தால் இணைய தளத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. வருமானவரித் துறை இணையதளம் சரியாக இயங்காத தால் கால அவகாசம் நீட் டிக்கப்பட வேண்டும்.
இதே போன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) மாதாந்திர படிவம் அல்லாது வருடாந்திர படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் டிச.31.
இதற்கான படிவம் -9, (9 சி -தணிக்கைக்கு உட்பட்டவர்கள்) வர்த்தகர்களும் தாக்கல் செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி வருடாந்திர படிவமே அக்டோபர் மாதத்தில் தான் நடைமுறைக்கு வந்தது.
ஆகவே அதையும் சரிசெய்து வருடாந்திர படிவம் தாக்கல் செய்ய மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



