fbpx
Homeபிற செய்திகள்வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு கிடைக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் 76 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன.

தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. சென்னையில் மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதி காரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக் காலங்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மாவட்டகலெக்டர்களுடன் இன்று விரிவாக ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் காணொளி வாயிலாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் அரசுத் துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங் கேற்றனர். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை யால் ஏற்படும் பாதிப்பு களை தடுக்கும் வகையில் என்னென்ன முன் னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக கலந்துரையாடினார்.

அப்போது மழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை அவர் வழங்கினார். குறிப்பாக, நீர்வழிப் பாதைகளை சீரமைப்பது, பொதுமக்களுக்கான போதிய பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை இக் கூட்டத்தில் முதல்வர் வழங்கியதாக தெரிகிறது.

மழை வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை பாது காக்க தேவையான நடவ டிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் விரைவாக எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத் தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இயற்கையை முறையாகக் கையாண்டால் அது கொடை! முறையாகக் கையாளவில்லை என்று சொன்னால், அதுவே பேரிடராக மாறிவிடும்.

இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு தவறும் போது, அது, தான் யார் என்பதை நமக்கு சுட்டிக்க £ட்டிவிட்டுச் சென்று விடுகிறது.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும்.

இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப்பகுதிகளிலும் ஏற்படக் கூடிய அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கும் என்பதை அனைவரும் நன்றாக உணர்வீர்கள்.

‘இயற்கையை இயைந்து வெல்வோம்!’ என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம் இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் உரு வாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் கார ணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வரும் 28ம் தேதி வரை டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img