Homeபிற செய்திகள்ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப் பாளையம் பிரைம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மேட் டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்றது.

விழாவிற்கு தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜு ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக ராஜு உடனடி முன்னாள் தலைவராக அரவிந்த் கார்த்திகேயன், செயலாளராக டாக்டர் ஜெயராமன், பொருளாளராக சுகன்யா அரவிந்த், துணைத் தலைவராக கோகுல் ஆகாஷ், இணைச் செயலாளராக அஸ்வின், சார்ஜன்ட் ஆர்ம்ஸ் ஆக கணேஷ், உறுப்பினர் சேர்க்கை தலைவராக ஜோயல் பப்ளிக் இமேஜ் யுவராஜ், சேவை திட்டங்கள் பவுண்டேஷன் சேர் மனாக கலைச்செல்வி, ஏரியா ஆப் போக்கஸ் ஆக சிவக்குமார், ரய்லா, சண்முகாதேவி, இண்டர்நேஷனல் சர்வீஸ் பாரத ரத்னம் குமார் இயற்கை வேளாண்மை பூபதி மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.

அங்கன்வாடி பள்ளிக்கு வாட்டர் டேங்க் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட ஆளுநர் (நியமனம்) டாக்டர் சுரேஷ் பாபு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

புதிய உறுப்பினர் சங்கீதாவுக்கு உதவி ஆளுநர் சிவ சதீஷ்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத் தார். விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும், கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

விழா நிகழ்ச்சிகளை சுகன்யா அரவிந்த் மற்றும் ரோசன், பிரதன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். முடிவில் செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img