fbpx
Homeபிற செய்திகள்ரூ.10.49 லட்சம் துவக்க விலையில் ஸ்கோடா கார் இந்தியாவில் அறிமுகம்

ரூ.10.49 லட்சம் துவக்க விலையில் ஸ்கோடா கார் இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ, இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி – ஆனŠKODA KUSHAQ- கார்களை அறிமுகம் செய்து முன்பதிவுகளைத் துவக்கி உள்ளது.

‘ஒரு நாடு ஒரு விலை’ தத்துவத்தின் அடிப்படையில் INR 10.49 லட்சம் எக்ஸ்- ஷோரூம் விலையில் நாடு முழுவதும் இந்த கார்கள் கிடைக்கும்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், இந்தியாவுக்காகத் தயாரான இந்த உலகத் தரம் வாய்ந்த கார்கள் நாடு முழுவதும் உள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

ஆக்டிவ் மாடல் கார்களுக்கு ரூ.10,49,999,
ஆம்பிஷன் கார்கள் முறையே ரூ.12,79,999, ரூ.14,19,999, ஸ்டைல் கார்கள் ரூ.14,59,999, ரூ.15,79,999, ரூ.16,19,999, ரூ.17,59,999 விலைகளில் கிடைக்கும்.

ஹனி ஆரஞ்சு, டொர்னாடோ ரெட், கேண்டி வைட், ரிஃப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய 5 வண்ணங்களில் கார்களை கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 4 ஆண்டுகள் / 1,00,000 கி.மீ உத்தரவாதத்துடன் ஜூலை-12ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி துவங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img