புதிய ரிலையன்ஸ் ஹெல்த் சூப்பர்டாப் அப் காப்பீட்டுத் திட்டத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஆர்.ஜி.ஐ.எல்.) அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும்வகையில் இக்காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதுவரை உள்ளவர்கள் சேரலாம்.
இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரோபோடிக் அறுவைச்சிகிச்சை, நவீன தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை, உறுப்புதான சிகிச்சைஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
மேலும் பயனாளர்கள் ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தவும் ரூ.1 லட்சம்வரைகாப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம்முதல் ரூ.1.3 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக பயனாளர்களால் சிறிய மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெறமுடியும். இதன் பிரீமியம் தொகையும் குறைவுதான்.
இதுகுறித்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக மக்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் மக்களுக்குஉதவும்வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தக்காப்பீட்டுத்திட்டம்பயனாளர்களைமட்டுமல்லஅவர்களின்குடும்பஉறுப்பினர்களையும்மருத்துவச்செலவில்இருந்துபாதுகாக்கும்கேடயமாகச்செயல்படும்என்றார்.
இந்தபாலிஸிவாங்கும்போதுபல்வேறுசலுகைகளைரிலையன்ஸ்நிறுவனம்வழங்கஉள்ளது. ஒன்றுமுதல் மூன்றுஆண்டுகள் வரைபயன் பெறும்வகையிலும் இந்த பாலிஸியைப் பயன்படுத்தலாம்.