இந்தியாவின் மிகப்பெரிய திறன் அடிப் படையிலான கேசுவல் கேமிங் நிறுவனமான ஜூபி (Zupee), ஜியோ பிளாட்ஃ பார்ம்ஸ் லிமிடெட் உடன் முதன்முறையாக உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஃப்யூட்சர்-ரெடி சூழல் அமைப்பில் பயனர் ஈடுபாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளின் ஒருங்கி ணைப்பு மற்றும் வலுவான ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தும் என்பது சிறப்பம்சம்.
இந்தப் புதிய கூட்டாண்மை மூலமாக, ஜூபி வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரைவான மற்றும் திறமையான வளர்ச்சி மற்றும் விநியோகத்தை எளிதாக்கும் ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அதோடு, ஜியோ பயனர்களுக்கு ஜூபியின் ஆன்லைன் திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் ஜூபி உருவாக்கும் பிற புதுமையான தயாரிப்புகளுக்கான அணுகலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கூட்டாண்மை மூலம், இந்திய வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக இந்தியா வின் மிகப்பெரிய கேமிங் தளமாக ஜூபிஐ உருவாக்கும் லட்சியத்துடன் முடிந்த வரை, பல பயனர்களுக்கு பல மொழிகளில் தரமான கேம்களை வழங்குவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதோடு, இந்தியாவில் 5ஜி வணிக ரீதியான அறிமுகத்திற்கு முன் 150 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி கைபேசிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, ஜியோவுடனான இந்த கூட்டாண்மை மூலம் முடிந்தவரை சந்தையைப் பிடிக்க ஜூபி தீவிரமாகச் செயல்பட இருக்கிறது.
தற்போது, வாடிக்¬ கயாளர்கள் மத்தியில் ஜியோ பெற்றுள்ள வளர்ச்சியின் குடையின் கீழ் ஜூபியும் பலனடையும்.
குறிப்பாக, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் ஜூபி கேம்கள் விநியோகிக்கப்படும். அது போல, இந்நிறுவனத்தின் பலன்களும் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
இது குறித்து, ஜூபி நிறுவனர் மற்றும் சிஇஓ தில்ஷர் சிங் பேசும்போது, “ஜூபி எப்போதும் அறிவியல் சார்ந்த மனித வளர்ச்சி மற்றும் கலாசாரம் சார்ந்த ஸ்டார்ட் அப்பாக இருக்க விரும்புகிறது.
அதன்படி, இந்தியாவின் சிறந்த பொறியியல் திறமை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது” என்றார்.



