பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் திற்குள்பட்ட 24. வீரபாண்டியில் மின் இணைப்பே இல்லாத ஆதி வாசிகளுக்கு சூரியசக்தி மின்வசதி வழங்கும் நிகழ் ச்சி சனிக்கிழமை நடந்தது.
சின்னத் தடாகத் தையடுத்த ஆனைகட்டி மலைப்பகுதியில் உள்ளது மருதங்கரை கீழ்பதி கிராமம். யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இங்கு 24 ஆதிவாசி குடும் பங்கள் வசிக்கின்றன. இதுநாள் வரை இவர்களுக்கு மின்வசதியே இல்லை. இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டக்குழு உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்த வீடுகளுக்கு மின்வசதி ஏற்படுத்த திட்டமிட்டது.
அதனடிப்படையில் உன்னவ் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரமும்,கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரத்தில் பாரத் எனர்ஜி சொல்யூசன் இயக்குநர் அமர்நாத் உதவியுடன் இவ்வீடுகளில் மின்வசதி ஏற்ப டுத்தப்பட்டது. இதனை பயனாளிகளுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்டத் தலைவர் கேசவசாமி, இயக்குநர் அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு கல்வெட்டினை திறந்து வைத்து மின் வசதியை இயக்கிவைத்தார்
நிகழ்ச்சியில் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந் தமிழ் செல்வி,மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவர் ஜெகதீஸ்வரி, பேரா சிரியர்கள் திருமூர்த்தி, சந்துரு ,அரசு நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



