Homeபிற செய்திகள்யோதா 2.0, இன்ட்ரா V20 பை-ஃப்யூயல், இன்ட்ரா V50 பிக்அப் வாகனங்கள்- டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

யோதா 2.0, இன்ட்ரா V20 பை-ஃப்யூயல், இன்ட்ரா V50 பிக்அப் வாகனங்கள்- டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இன்று யோதா 2.0, இன்ட்ரா V20 பை-ஃப்யூயல் மற்றும் இன்ட்ரா V50 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் வளர்ந்து வரும் பிக்கப் வாகனங்கள் பிரிவில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது.

இந்த உறுதியான மற்றும் ஆற்றல்மிக்க பிக்கப்கள் கம்பீரமான புதிய வடிவமைப்புடன் வருகின்றன.
புதிய யோதா 2.0, இன்ட்ரா V20 பை-ஃபி யூயல், இன்ட்ரா V50 ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் விவசாயம், கோழி வளர்ப்பு, FMCG, மின்-வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளின் விரிவாக்கத் தேவைகள் மற்றும் பல்வேறு இயக்கத் தேவைகளுக்கு சேவையாற்றச் சிறந்தவை யாகும்.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் சிறந்த பிக் அப்களை அறிமுகப்படுத்துவதை முன்னிட்டு, நாடு முழு வதும் உள்ள வாடிக் கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் 750 புதிய வாகனங்களை டெலி வரி செய்தது.டாடா மோட்டார்ஸின் செயல் இயக்குநர் கிரிஷ் வாக் பேசியதாவது:

புதிய பிக்அப்களின் ஒவ்வொரு அம்சமும் நகர்ப்புற, டவுன் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு திறமையாக சேவை செய்யும் வகையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவை உறுதியான புதிய வடிவமைப்புடனும், அதிக எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்ல அதிக பேலோட் திறனையும் வழங்கும். மிகப்பெரிய சுமைகளைச் சுமந்து செல்லும் மிகப்பெரிய தளம், அதிக சக்தி மற்றும் எடை விகிதம், அதிகபட்ச தூரத்தை கடக்க நீண்ட தூரச் செயல்திறன் மற்றும் மன அழுத்தமில்லாத வாக னம் ஓட்டுவதற்கான நவீன பாதுகாப்பு மற்றும் ஆறுதல் அம்சங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

தொலைதூர இடங் களை அடைய அனைத்து நிலப் பரப்பு அணுகல் மற் றும் இந்தியாவின் மிகப் பெரிய டீலர் மற்றும் சேவை நெட்வொர்க்கின் ஆதரவுடன், விரிவான பிக்அப்கள் வழங்கும் முழுமையான மதிப்பு முன்மொழிவு எதனாலும் தோற்கடிக்க முடியாதது.

இந்த புது யுக பிக்கப்க ளின் அறிமுகம், அதிக முன்னேற்றம் மற்றும் வெற்றியை வழங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் வாய்ந்த வாக னங்களுடன் எப்போதும் திறன்பெற்று அவர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img