‘யூஇஎப்ஏ ஈரோ 2020 கால்பந்து’ போட்டியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ இணைந்துள்ளது.
விவோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த விளையாட்டை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கூற இருக்கிறது.
இதற்காக இந்நிறுவனம் தனது புதிய ‘அழகான தருணங்கள்’ என்னும் விளம்பர பிரச்சாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து விவோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியுமான ஸ்பார்க் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த கால்பந்தாட்ட போட்டியை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
தற்போது நாங்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். அந்தந்த விளையாட்டின் சிறப்புகளை போற்றுவதோடு அந்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
மேலும்,மக்கள்தங்கள் வாழ்க்கையின் தனிச்சிறப்புமிக்க தருணங்களைப் கண்டறிந்து பகிர்ந்து கொள்ள நாங்கள் அவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் இன்னும் மாயாஜாலமாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.
கால்பந்து போட்டி தொடர்பான புதிய விளம்பர வீடியோ ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த விளம்பரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும், யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 11-ந்தேதி நடைபெறும் கால்பந்து போட்டியின் துவக்க நாள் நிகழ்ச்சியிலும் மற்றும் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சராக விவோ நிறுவனம் உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர் களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க இந்நிறுவனம் யுஇஎப்ஏவுடன் இணைந்துள்ளது.