fbpx
Homeபிற செய்திகள்யுனைடெட் வி பிளே கால்பந்து இறுதிப் போட்டியில் 4 பேர் வெற்றி

யுனைடெட் வி பிளே கால்பந்து இறுதிப் போட்டியில் 4 பேர் வெற்றி

டயர் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் அப்போலோ டயர்ஸ், யுனைடெட் வி பிளே என்ற பெயரில் அது நடத்தி வரும் அடிமட்ட கால்பந்தாட்ட போட்டியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.

கால்பந்தாட்ட கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் – டின் ஒத்துழைப்போடு நடத்தப்படும் இக்கால்பந்தாட்ட நிகழ்வின் இறுதிப்போட்டி சென்னையில் நடந்தேறியது.

சென்னை ஆர்.எஸ்.பிரியரஞ்சன், மேகாலயாவின் பிரட்ரிக் குர்ப், சண்டிகாரின் ரொனால்ட் சிங், புனேவின் குணால் யோல் ஆகிய 4 இளம் கால்பந்தாட்ட வீரர்கள் வெற்றியா ளர்களாக தேர்வு பெற்றுள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப்பின் ஜாம் பவான்களான பீட்டர் ஸ்மிச்செல், நெமஞ்சா விடிக், மைக்கேல் சில்வெஸ்ட்ரே, லூயிஸ் சாஹா, குயின்டன் பார்ச்சூன், வெஸ் பிரவுன் மற்றும் ரோனி ஜான்சன் ஆகிய ஏழு பேர் இறுதிப்போட்டி நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

யுனைடெட் வி பிளே இரண் டாவது சீசன் இந்தியாவில் 19 இடங்களில் நடத்தப்பட்டது. 10 மெய்நிகர் பயிலரங்குகளும், 12 மாஸ்டர்கிளாஸ் வகுப்புகளும் மற்றும் இரு காலகட்டங்களில், 8 அமைவிடங்களில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ் வுகள் என ஒரு கலவை முறையில் நடைபெற்றது.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் அலையன்சஸ் மற் றும் பார்ட்னர்ஷிப்ஸ் – ன் தலைமைச் செயல் அலுவலர் விக்டோரியா டிம்ப்சன் கூறிய தாவது: அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடனான தனது நீண்ட கால கூட்டாண்மை குறித்து மான்செஸ்டர் யுனைடெட் பெரு மை கொள்கிறது.

இந்தியாவில் ஆர்வமுள்ள இளம் வீரர்கள் மத்தியில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிப்பதற்காக அவர்கள் செய்து வருகின்ற தொடர்ச்சியான செயல்முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.

இரண்டாவது ஆண் டில் இருக்கும் யுனைடெட் வி பிளே செயல்திட்டம், இந்தியா வின் 5000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்குமாறு சென்றடைந்திருக்கிறது என்றார்.

அப்போலோ டயர்ஸ் லிமிடெட்- ன் துணைத் தலைவர் – சந்தையாக்கல், விற்பனை மற்றும் சர்வீஸ் (இந்தியா, சார்க் மற்றும் ஓஷியானா), ராஜேஷ் தாஹியா பேசுகையில், அடிமட்ட அளவில் கால்பந்தாட்டத்தை வளர்க்க வேண்டுமென்ற எமது இச்செயல்திட்டம், ஓரளவுக்கு வெற்றியினை வெளிப்படுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருவதை காண்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img