லைஃப்ஸ்டைல் மற்றும் மொபைல் அக்சஸரிஸ் துறையில் முன்னணி பிராண்டாகத் திகழும் மொபில்லா நிறுவனத்தின், சந்தை யாக்கல் மற்றும் தகவலளிப்பு விளம்பரங்களில் இனிவரும் காலங்களில், திரைப்பட நடி கையும், மாடலுமான காஜல் அகர்வால் இடம்பெறுவார்.
அழகு தேவதையான காஜல் அகர்வாலின் கவர்ச்சியும், ஈர்ப் பும் அனைத்து வயது பிரி வைச் சேர்ந்த நுகர்வோரை மொபில்லா சென்றடைவதற்கு நிச்சயமாக உதவும்.
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:
ஒரு புதிய வகையினத்தோடு பணியாற்ற வாய்ப் பையும், அதுகுறித்த நல்ல புரிதலையும் இது எனக்கு வழங் குவதால், இந்த கூட்டுவகிப்பு செயல்பாடு உற்சாகமளிக்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் எனக்கும் மற்றும் முக்கி யமாக மொபில்லாவிற்கும் வெற்றியை ஈட்டித்தர உறுதி கொண்டிருக்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக இதன் தயாரிப்புகளது தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக் காக இந்திய நுகர்வோர்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றிருக்கும் கௌரவமிக்க இந்திய பிராண்டான மொபில்லா போன்ற பிராண்டின் தூதராக இணைந்து செயல்படுவது, மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் சேர்த்து தருகிறது என்றார்.
மொபில்லா இணை நிறு வனர்களான ஜிக்னேஷ் ஷா, ஹெட்டல் ஷா இதுகுறித்து பேசு கையில், “காஜல் அகர்வால் நாடெங்கிலும் உள்ள மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்ற நம்பகமான ஆளுமையாக இருக்கிறார்.
மொபில்லா உடன் அவர் இணைந்திருப்பது, எமது தயாரிப்புகள் மக்களின் வாழ்க்கையில் பயனையும், மதிப்பையும் உறுதியாக சேர்க்கும் என்று வலுவாக உறுதிசெய்ய உதவும்,” என்றனர்.
மொபில்லா நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி விஷால் குப்தா கூறியதாவது: காஜல் அகர்வால், காண்போரை தன்பக்கம் ஈர்க்கக்கூடிய சிறப்பான ஆளுமை. அவரது துறையிலும், மக்கள் மத்தியிலும் சிறந்த அங்கீகாரத்தையும் கொண்டிருப்பது இவரது தனிச்சிறப்பாகும்.
மொபில்லா கிரியேட்டிவ் ஹெட் சச்சின் ஷர்மா பேசுகையில், “திரைப்படத் துறையில் காஜல் பிரபலமான ஐகானாக புகழ்பெற்றிருக்கிறார். அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த நபர்களுக்கு உத்வேகமளிக்கும் ஆளுமையாக அறியப்படுகிறார்.
இச்சிறந்த ஆளுமை எங்களோடு இணைந்திருப்பதால், எமது தயாரிப்புகள் அவற்றைப் பயன்படுத்துவோரது வாழ்க்கையில் உருவாக்கவிருக்கும் நேர்மறை மாற்றத்தை அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளுமாறு செய்ய இயலும்” என்றார்.



