Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு, ஆதரவற்றோர் மீட்பு மையங்கள் - அமைச்சர்கள் துவக்கினர்

மேட்டுப்பாளையத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு, ஆதரவற்றோர் மீட்பு மையங்கள் – அமைச்சர்கள் துவக்கினர்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவம னையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தேவை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜடையம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கே.ஜி. டெனிம் நிறுவனம் ரூ.65 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறி வூட்டும் மையத்தை ஏற்படுத்தி கொடுத் துள்ளனர்

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு இயந்திரத்தை மருத்துவமனை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இம்மையத்தின் மூலம் நிமிடத்திற்கு 300 லிட்டர் ஆக்ஸிஜன் என ஒரு மணி நேரத்திற்கு 8,000 லிட்டர் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 60 படுக்கைகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நகராட்சி பழைய கட்டிடத்தில் புது பொலிவுடன் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கலந்து கொண்டு கூறுகையில், நமது கோவை மாவட்டத்தில் மேட்டுப்பா ளையம் பகுதியில் மட்டுமே இந்த பரா மரிப்பு மையம் துவக்கப்பட்டது என தெரி வித்தார்.

நிகழ்ச்சியில் கோவை கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஷர்மிளா, மேட்டுப்பாளையம் அரசு மருத்து வமனை தலைமை மருத்துவர் கண் ணன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு, கவிதா. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஷ்ரப்அலி, ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், தெற்கு நகர பொறுப்பாளர் முகமது யூனுஸ், மற்றும் கே.ஜி.நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img