ராமநாதபுரம் மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசுவாமி தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் இணை அமைச்சர் நாராயணசுவாமி பேசி யதாவது:
இந்தியாவில் 117 மாவட்டங் களில் முன்னேற விழையும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட் டங்களில் இத்திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர் வளம், திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம் மாவட்டத்தில் சிறுவயதிலே திருமணம், உப்பு தண்ணீர் மற் றும் பல்வேறு உணவு பழக்க வழக்கங்களால் கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்களிடையே ரத்தசோகை காணப்படுகிறது.
ரத்தசோகை, சிறுவயது திருமணம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் பல்வேறு அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் நேரிடையாக சென்று விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
காசநோய் ஆரம்ப காலத்திலே கண்டறிவதன் மூலம் குணப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் ஆரம்ப காலத்தில் கண்டறிவதற்கான முறைகளை கடைபிடிக்க வேண்டும்.கல்வி யில் பள்ளி மாணவர்களின் இடை நிற்றல் குறித்து காரணங்களை கண்டறிய வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை கட்ட மைப்பு மேம்படுத்த வேண் டும். அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எனவே பள்ளிகளில் உள்ள அனைத்து கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று அறிவு றுத்தப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் திட்டப் பணி கள் நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ராம நாதபுரம் மாவட்டத்தில் 90,000 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் திட்ட பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் உரப்புளி கிரா மத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நாற்றாங்கால் பண்ணையில் நாற்றாங்கால் அமைக்கும் பணியினையும், அரியனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காட்டினையும், அரியனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பூங்கா நகர் மற்றும் ஏ.டிகாலனியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.15 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரியனேந்தல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், போகலூர் கிராமத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும், பொட்டிதட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மாணவ-மாணவிகளிடம் மாண்புமிகு ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகா ரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசுவாமி உரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



