2010 முதல் 2019ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம் மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, கௌரவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்படவேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கன வினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செம்மொழிக் கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப் பெற்றது.
சென்னை, பெரும் பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறு வனத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கப் பட்ட 16.586 ஏக்கர் நிலத்தில், ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தை பிரதமர் 12.01.2022 அன்று காணொலிக் காட்சி வாயி லாகத் திறந்து வைத்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்துக் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.
இந்த அறக்கட்டளை யின் மூலமாக ஆண்டு தோறும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச் சிலையும் அடங்கியதாகும்.
தொல்லியல், கல்வெட்டி யல், நாணயவியல், இலக் கியம், மொழியியல்,படைப் பிலக்கியம், இலக்கியத் திற னாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அறக்கட்டளை துவங்கப்பட்ட பின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கரு ணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெ டுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் நிறுவனத் தின் 8-ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது களுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி, முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் இன்று (22ம் தேதி) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், 2011 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் பொன். கோதண்டராமனுக்கும் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்), 2012 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் இ.சுந்தர மூர்த்திக்கும் (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்), 2013 ஆம் ஆண்டிற்கான விரு தினைப் பேராசிரியர் ப.மருதநாயகத்துக்கும் (மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்). 2014 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு.மோகனராசுக்கும் (மேனாள் பேராசிரியர் – தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை), 2015 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), 2016ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கா.ராஜனுக்கும் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்), 2018 ஆம் ஆண்டிற்கான விருதினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை), 2019 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு.சிவமணிக்கும் (மேனாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் – திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை) ஆகிய விருதாளர்களுக்கு விருது டன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண் கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதியின் திருவுரு வச்சிலையும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
2010 ஆம் ஆண்டிற் கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் வீ.எஸ். ராஜம் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் ஆகியோர் இவ்விழாவிற்கு வர இயலாததால் அவர்களுக்கு பிறிதொரு நாளில் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



