fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்?

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால்,இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தேவைப்பட்டால் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஒமைக் ரான் வகை கொரோனா தொற்று அதிக ரித்து வரும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப் படுத்துவது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் தமிழகத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது, ஒமைக்ரான் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ம.பி.,உ.பி மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்ப டுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

படிக்க வேண்டும்

spot_img