fbpx
Homeபிற செய்திகள்முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை ஜூன் 26ல் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை ஜூன் 26ல் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள் ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப் பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என்நேரு இன்று காலை ஆய்வு செய்தார். அத னைத் தொடர்ந்து செய் தியாளர்களிடம் கே.என் நேரு கூறியதாவது:

திருச்சியில் 387.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலனைண பாலத்தை திறந்து வைக் கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனது. இந்நிலையில் இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார்.

ஆனால் இது குறுகலாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது. அதே நேரம் இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரி விப்பார்.

திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்க னவே 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் – வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img