fbpx
Homeபிற செய்திகள்மாவீரர் பொல்லான் சிலையுடன் மணிமண்டபம் - அமைச்சர்கள் தகவல்

மாவீரர் பொல்லான் சிலையுடன் மணிமண்டபம் – அமைச்சர்கள் தகவல்

சுதந்திர போராட்டவீரர் பொல்லான் முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்ன மலையின் படைத் தளபதியான வீரர் பொல்லான் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி பேரூராட்சி சமுதாய கூடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் வீரர் பொல்லான் நினைவு நாளை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு முதல் வீரர் பொல்லான் நினைவு நாள்அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தைச் சார்ந்த சுதந்திர« பாராட்ட வீரர் தீரன் சின்னமலை என்பவருக்கு மெய் காவலராக இருந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருந்த பொல்லான் என்பவரையும் நினைவு கூறும் வகையில், அவரது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மாவீரன் பொல்லான் பிறந்த தினம் 28.12.1768 மற்றும் நினைவு நாள்ஆடி 1 (17.07.1805) ஆகும்.

வீரன் பொல்லானின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லும் வகையில் அவரின் நினைவு நாள் ஆடி மாதம் 1-ம் நாள் அனுசரிக்கப்பட்டு வரு கிறது.

வீரர் பொல்லான் முழுதிருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக் கவும், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று வீரர் பொல்லான் நினைவு தினத்தையொட்டி அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வீரர் பொல்லான் பிறந்த நாளான டிசம்பர் 28-ம் தேதி அரசு விழாவாக கொண் டாடப்படவுள்ளது.

எனவே அதற்குள்ளாக மண்டபத்திற்காகவும், திருவுருவச்சிலை அமைப் பதற்காகவும் அனைத்து அடிப்படை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டு மென முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே வீரர் பொல்லானுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி அப்பணிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் வி.சசி« மாகன் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா மொடக்குறிச்சி வருவாய்வட்டாட்சியர் சங்கர் கணேஷ், மொடக் குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img