Homeபிற செய்திகள்மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கலை கல்லூரி சாம்பியன்

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கலை கல்லூரி சாம்பியன்

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாம் பியன் பட்டம் வென்றனர்.

21-வது கொங்கு கோப்பைக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கடந்த வாரம் நடந்தது.

இப்போட்டியில் கோவை நவஇந்தியா ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அணி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணியை 3-&1 என்ற செட் கணக்கிலும், சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணியை 3-&1 என்ற செட் கணக்கிலும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. அணியை 3-1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதில் மாணவர் கே.பிரபு சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே. வடிவேலு ஆகியோருக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img