கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள் தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதை தொடர்ந்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் நாளொன்றுக்கு 3 பூங்காக்கள் என 15 பூங்காக்களை தூய்மைப் படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) கிழக்கு மண்டலம் வார்டு எண்.65 அன்னை வேளாங்கண்ணி நகர் பூங்கா, வார்டு எண்.36 முருகன் நகர் பூங்கா, வார்டு எண்.59 பழனியப்பா லே-அவுட் பூங்கா, மேற்கு மண்டலம் வார்டு எண்.20 லட்சுமி நகர் பூங்கா, வார்டு எண்.19 தென்றல் நகர் பூங்கா, வார்டு எண்.13 ராமசாமி லே-அவுட் பூங்கா, வடக்கு மண்டலம் வார்டு எண்.1 துடியலூர் சேரன் காலனி பூங்கா, வார்டு எண்.27 சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகர் பூங்கா,
வார்டு எண்.39 கோபால் நகர் சிறுவர் பூங்கா, தெற்கு மண்டலம் வார்டு எண்.93 ராஜகோபால் நகர் பூங்கா, வார்டு எண்.94 எம்.கே. என். நகர் பூங்கா, மத்திய மண்டலம் வார்டு எண்.63 அலமு நகர் பூங்கா, வார்டு எண்.68 கன்னிகா பரமேஸ்வரி நகர் பூங்கா, வார்டு எண்.74 ஆறுமுகம் நகர் பூங்கா ஆகிய பூங்காக்களில் உள்ள குப்பையை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.



