Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி

மாணவர்களுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி

கேபிஆர் கலை அறிவி யல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பில், ‘இலக்கு அமைத்தல் மற்றும் நம்பிக்கையை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மென்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (செப்.14)ல் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பாலுசாமி, கல்லூரி ஆலோசகர் மற் றும் செயலர் முனைவர் எஸ்.ராமசந்திரன் தலைமை வகித்தனர்.

கணினி அறிவியல் துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் டி. தீபா வரவேற்றார். கணினி அறிவியல் துறை, புல முதன்மையர் முனைவர் பி. ஷர்மிளா, வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் அக்ஷிதா அசோகன் பேசு கையில், மாணவர்கள் தங்களது வலிமை மற்றும் பலவீனம் அறிந்து கொண்டு இலக்கை தீர்மானிக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று எடுத்துரைத்தார்.

சில செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் மூலம் மாணவர்கள் எவ்வாறான சூழ்நிலை களில் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள் மற்றும் அவற்றை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் விளக்கினார்.

கணினிஅறிவியல் துறை உதவிப்பேராசிரியர் எஸ்.பத்மபிரியா நன்றி கூறினார்.
இதில் 60 மாணவர்கள் பங்கு பெற்றுப் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img