மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் தனது பி.எஸ்.ஐ.வி&க்குட்பட்ட கட்டுமான சாதனங்களான புதிய பி.எஸ்.ஐ.வி உடனான மோட்டார் கிரேடர் மஹிந்திரா ரோட்மாஸ்டர் ஜி 9075 அண்டு ஜி 9595 அண்டு பேக்ஹோ லோடர் மஹிந்திரா எர்த்மாஸ்டர் எஸ்எக்ஸ்> விஎக்ஸ் ஆகியவற்றை அதன் வணிக கட்டுமான உபகரணங்களின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் மஹிந்திரா ட்ரக் அண்டு பஸ் மற்றும் கட்டுமான உபகரணங்களின் வணிகத் தலைவர் ஜலாஜ் குப்தா கூறியதாவது:
கட்டுமான உபகரணங்கள் வணிகத்திற்கான எங்கள் பிராண்ட் நோக்கமானது, வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன் தரமான சேவையை வழங்குவதாகும். அதற்காக இப்போது எங்கள் பி.எஸ்.ஐ.வி வரம்பில் மஹிந்திராவை அறிமுகப்படுத்துகிறோம். அதுவும் எர்த்மாஸ்டர் பேக்ஹோ லோடர்களுடன் என்பது சிறப்பம்சம். வாடிக்கையாளர்களின் மகிழ்வே எங்கள் நோக்கம்.
கட்டுமான உபகரணத் தொழிலுக்கு புதிய வரம்பு விதிமுறைகள் வருவதால் பிஎஸ்ஐவி இணக்கமான மஹிந்திரா ரோட்மாஸ்டர் மோட்டார் கிரேடர்களை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
மேலும் கடினமான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.