கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று(அக்.4) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொது மக்களிடையே மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, விழிப்புணர்வு பிரச் சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தொடங்கி வைத் தார்.
மழைக்காலங்களில் மழைநீரை சேகரித்து வைப்பது இன்றைய கால கட்டத்தில் மிக அவ சியமான ஒன்றாகும்.
மழைநீரை சேகரிப்பதால் அதை குடிநீர் தேவைக்கும், கால்நடைகளுக்கு மட்டும் அல்லாமல் நீர்ப்பாச னத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு விதமான முறை ஆகும்.
குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் மழைநீரை சேகரித்து வைத்து, விவசாயத்திற்கு பயன்படு த்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து அதை செயல்படுத்த வேண் டும். அதனடிப்படையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாகனம் வாயிலாக, 10 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாள ர்செல்லமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



