fbpx
Homeபிற செய்திகள்மலுமிச்சம்பட்டி அரசுப் பள்ளிக்கு கட்டிடங்களை கட்டித் தந்த வாக்கரூ

மலுமிச்சம்பட்டி அரசுப் பள்ளிக்கு கட்டிடங்களை கட்டித் தந்த வாக்கரூ

கோவை அருகே மலுமிச் சம்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகளையும், மதிய உணவு தயாரிப்புக்கான கூடத்தையும் ரூ.50 இலட்சம் திட்டமதிப்பில் வாக்கரூ கட்டித் தந்திருக்கிறது.

வாக்கரூ குழும நிறு வனங்களின் கார்ப் பரேட் சமூக பொறுப்புறுதி பிரிவான வாக்கரூஃ பவுண்டேஷன், உள்ளூர் சமூகங்களில் வசதி குறைவானவர்களுக்கு கல்விக்கான ஆதரவை வழங்குவதில் ஆர்வமும், பொறுப்புறுதியும் கொண்டிருக்கிறது.

இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மலுமிச்சம் பட்டி பகுதியில் வசதிக்குறைவான குழந்தைகளின் கல்விக்கு ஆதர வளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கோவை மாவட்ட கல்வித் துறை யோடு மூன்று ஆண்டுகளுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் வாக்கரூ ஃபவுண்டேஷன் கையெழுத்திட்டிருக்கிறது.

சமீபத்தில், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளையும், மதிய உணவு தயாரிப்புக்கான கூடத்தையும் ரூ.50 இலட்சம் திட்ட மதிப்பில் வாக்கரூ கட்டித் தந்திருக்கிறது.

அடிக்கல் நாட்டுவிழா பூஜை நிகழ்விலும், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ,தொடங்கப்படும் விழாவிலும் இப்பள்ளி தலைமை ஆசிரியரும் மற்றும் உள்ளூர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

வாக்கரூ குழுமத்தால் மேற் கொள்ளப்படுகின்ற பல்வேறு செயல்திட்டங்களின் தொகுப்பில் இந்த பள்ளிக் கட்டிட செயல் திட்டமும் ஒன்றாகும். நங்கன்ஜுட், மைசூர் மற்றும் கினலூர், கோழிக் கோடு ஆகிய இடங்களிலும் இதுபோன்ற செயல்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வாக்கரூ குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் விகேசி நௌஷாத் இச்செயல் திட்டம் குறித்து கூறியதாவது:

கற்றல் சூழலும், உட்கட்டமைப்பு வசதிகளும் ஒரு குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் இன்றியமையாத அம்சங்கள் என்ற உண்மை மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் வாக்கரூ, மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 4 வகுப்பறைகள் மற்றும் ஒரு மதிய உணவு தயாரிப்புக் கூடம் ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவை வழங்கியிருப்பதன் மூலம் அங்கு அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவதற்கு வாக்கரூ முக்கிய பங்காற்றியிருக்கிறது உடல் நலபராமரிப்பு, விளையாட்டு, பெண்களுக்கான திறனதிகாரம் ஆகிய பிரிவுகளில் வளர்ச்சி செயல் திட்டங்களையும் வாக்கரூ ஃபவண்டேஷன் மேற்கொண்டு வருகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img