Homeபிற செய்திகள்மலிவு விலையில் ஸ்டைலிஷ் ஷைன் ஏஷியன் பெயிண்ட்ஸ் அறிமுகம்

மலிவு விலையில் ஸ்டைலிஷ் ஷைன் ஏஷியன் பெயிண்ட்ஸ் அறிமுகம்

ஏஷியன் பெயிண்ட்ஸ் தங்களுடைய மலிவு விலை வண்ணப்பூச்சுகளுக்கான புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. உட்புறச் சுவர்களுக்கு டிராக்டர் ஷைன் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு ஏஸ் ஷைன். இந்த பெயிண்ட்கள் நுகர் வோருக்கு நியாயமான விலையில் நீண்ட கால பிரகாசத்தை வழங்கு கின்றன. மூன்று வருட செயல்திறன் உத்தர வாதத்துடன் வீடுகளை மாற்றுவதற்கு கிடைக்கிறது. பெயிண்ட்கள் ஒருவரின் வீட்டிற்கு ஆடம்பரமான தோற்றத்தை சேர்க்கின்றன.

ஒ கில்வி இந்தியா மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட டிவிசி தென்னிந்திய சந்தைக்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபல நடிகரும் நகைச்சுவை நடிகருமான படவா கோபியால் சித்தரி க்கப்பட்ட பாலாவின் கதை இடம்பெற்றுள்ளது.

ஏஷியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ., அமித் சிங்கில் கூறியதாவது:

வீடுகள் என்பது ஒருவரின் ஆளுமை மற்றும் ரசனையின் பிரதிபலிப்பாகும். ஏஷியன் பெயிண்ட்ஸ் டிராக்டர் மற்றும் ஏஸ் ஷைன் மூலம், வீட்டு உரிமையாளரும் தங்கள் சுவர்களுக்கு அதிக செலவு செய்யாமல் நேர்த்தியான பிரகாசத்தை சேர்க்க முடியும். பண்டிகைகளின் போது, நுகர்வோர் தங்கள் வீடுகளை புதுப்பிக்க முற்படும்போது, எங்களின் செலவு குறைந்த பெயிண்ட் ரேஞ்ச் அந்த வேலையைச் செய்கிறது. அதே நேரத்தில் மிக உயர்ந்த தரத்திலான பளபளப்பை அளிக்கிறது என்றார்.

ஒகில்வி இந்தியாவின் தலைமை வியூக அதிகாரி பிரேம் நாராயண் கூறியதாவது: பெயிண்ட்டிங் செய்வதன் விளைவாக சுவர்கள் மற்றும் வீடுகள் பிரகாசிக்கின்றன. அவை வீட்டின் உரிமையாளருக்கு பெருமை சேர்க்கின்றன. இது அவருடைய/அவளுடைய பட்ஜெட்டில் வழங்கப்படும் போது உரிமையாளரின் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். உட்புறத்திற்கான டிராக்டர் ஷைன் மற்றும் வெளிப் புறங்களுக்கு ஏஸ் ஷைன் பட்ஜெட்டில் பளபளப்பை வழங்குவதற்கான உயர் அளவுகோலாக அமை கிறது. இந்த பிராண்டுகள் தனது பட்ஜெட்டில் வழங்கும் குறிப்பிடத்தக்க பிரகாசத்தை அனுபவித்த உரிமையாளரை கிரியேட் டிவ் எக்ஸிகியூஷன் சித்தரிக்கிறது.

இந்த முடிவால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மற்ற அனைத்தையும் ஷைன் வழங்கக்கூடியவற்றுடன் ஒப்பிட முடியாது. இது நகைச்சுவையான கதை சொல்லலுக்கு இட்டுச் செல்கிறது. இது ‘கிரேட் ஆன் ஷைன், லைட் ஆன் யுவர் பாக்கெட்’ என்ற செய்தியை சொல்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img