fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் 3-வது விற்பனைக் கடையை திறந்தது

மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் 3-வது விற்பனைக் கடையை திறந்தது

உலகில் முன்னணி நகை விற்பனையாளரான மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், சிங்கப்பூரில் தனது மூன்றாவது கடையைத் தொடங்கி உள்ளது.

10 நாடுளில் 200-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம்.

மலபார் குழுமத்தின் இணைத் தலைவர் டாக்டர் பி.ஏ.இப்ராகீம் ஹாஜீ, துணைத் தலைவர் அப்துல் சலாம், கே.பி., சாம்லால் அகமத், மானேஜிங் டைரக்டர் (சர்வதேச செயல்பாடுகள்), ஆஷர் ஓ. இந்திய செயல்பாடுகள் மற்றும் மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரின் மெய்நிகர் இருப்பில், மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது தலைமையில் பிரம்மாண்டமான மெய்நிகர் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

புதிய விற்பனைக் கடை, பாரம்பரிய மற்றும் சமகால வடிவமைப்பு நகைத் தொகுப்புகளின் பெரிய சேகரிப்பை கொண்டுள்ளது.

மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ், அதன் இந்தியாவின் மணப்பெண்கள் (பிரைட்ஸ் ஆப் இந்தியா) என்ற பிரச்சாரத்தின் மூலம் புகழ்பெற்ற திருமணத்திற்கான நகைக்கடை என்ற தனது நிலையை வலுப்படுத்தி உள்ளது.

தூர கிழக்குப் பகுதிகளில் எங்கள் விரிவாக்கத்தில் இந்த கடை திறப்பு விழா, எங்கள் மாலையில் மற்றொரு முத்தாக இணைந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தூர கிழக்கு பகுதிகளில் உள்ள எங்களின் 7 கடைகளில் 4 மலேசியாவிலும், 3 சிங்கப்பூரிலும் உள்ளது.

இந்தப் பகுதியில் மேலும் ஒரு விரிவாக்கத்துடன் பயணத்தை தொடர்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியாவில் மேலும் இரண்டு கடைகள் திறக்கப்பட உள்ளன என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது தெரிவித்தார்.

கடை திறப்பு விழாவை முன்னிட்டு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 1000 எஸ்ஜிடி (சிங்கப்பூர் டாலர்) மதிப்புள்ள வைரம், நவரத்தின நகைகளை வாங்கும்போது அரை கிராம் தங்க காசு மற்றும் 1500 எஸ்ஜிடி மதிப்புள்ள வைரம் மற்றும் நவரத்தின நகை வாங்கும்போது, 1கிராம் தங்க காசு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சலுகை சிங்கப்பூரில் உள்ள அனைத்து மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ் கடைகளில் நவம்பர் 4-ம் தேதி வரை கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img