Homeபிற செய்திகள்மருதம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை:-ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்

மருதம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை:-ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்

கோவை மருதம் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற் பனை தொடக்கவிழா இன்று (27 -ந்தேதி) நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன் கலந்துகொண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்தார்.

விழாவில் கோ – ஆப்டெக்சின் தலைவர் வெங்கடாஜலம் நிர்வாக குழு இயக்குனர் எஸ்.பி.ரமேஷ். கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா, உதவி அதிகாரி மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சிதலைவர் சமீரன் கூறியதா வது:- கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் “தீபாவளி” சிறப்புத் தள்ளுபடி விற்பனையையொட்டி 15-9-2022 முதல் அரசு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

இந்த ஆண்டு புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டுசேலை, பருத்தி சேலை, லுங்கி, சட்டைகள், உள்பட பல் வேறு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விற்பனை குறியீடு ரூ265.31 லட்சம், இந்த ஆண்டு விற்பனை குறியீடு ரூ.515 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img