fbpx
Homeபிற செய்திகள்மத்திய மண்டல பகுதியில் வளர்ச்சிப்பணி: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மத்திய மண்டல பகுதியில் வளர்ச்சிப்பணி: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று(செப்.16) பார்வை யிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.45-க்கு உட் பட்ட காமாட்சி நகர், நாரா யணசாமி வீதியில் புதியதாக மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆணையாளர் அவற்றை பார்வையிட்டார்.

அப்பகுதியில் புதிதாக நியாய விலைக் கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
அங்கு அமைக்கப்பட் டுள்ள குடிநீர் நீருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நீருந்து நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட் டறிந்தார். சங்கனூர் மின்மயானத்தில் ஆய்வு செய்தார்.

டாடாபாத் பகுதி ராஜவீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மத் திய மண்டல உதவி ஆணை யாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திருமால் மற்றும் அலுவலர்கள் உடனிருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img