fbpx
Homeபிற செய்திகள்மத்திய அரசுப் பணிக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி : கோவை ஆட்சியர்

மத்திய அரசுப் பணிக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி : கோவை ஆட்சியர்

இணையதளம் வாயிலாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட் டுள்ள பணியிட தேர்வுகளுக்கு இணைய தளம் மூலம் பயிற்சி அளிப்பதாகவும், இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான Staff Selection Commission மூலம் தற்போது 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான SSC-Phase-IX-Project Assistant பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 3261 பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்த பட்சம் 18 முதல் அதிக பட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவின ருக்கு இத்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு தளர்வுகள் உள்ளன. இம்மாதம் 25ம் தேதி வரை இத்தேர்விற்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ. 100 என்று அறி விக்கப்பட்டுள்ளது.

SC/ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை. மேலும் விவரங்களை லீttஜீs://ssநீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் அறியலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனு தாரர்கள் தேர்வை சிறப் பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிற்சி வட்டம் மூலம் கூகுள் மீட் செயலி வாயிலாக சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் ஆகியவை இணையதளம் வாயிலா கவே பகிரப்படும்.
மேலும் வாரந்தோ றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும் செய்யப்ப டுகிறது.

பயிற்சி வகுப்புகளைப் பற்றி அறிய 94990 55938 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செயலி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.மேலும் இத்தேர்விற்கான பாடக் குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் வெளி யிடப்படும்.

ஆகவே போட்டித் தேர்வு எழுதி மத்திய அரசில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img