fbpx
Homeபிற செய்திகள்மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக கூட சேர்ந்து இருக்கிறோம்- துரை வைகோ...

மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக கூட சேர்ந்து இருக்கிறோம்- துரை வைகோ பேட்டி

மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளதாக வைகோவின் மகனும் மதிமுக தலைமை கழக செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை வி.கே.கே-.மேனன் ரோடு பகுதியில் உள்ள மதிமுக அலுவல கத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரி செய்தியாளர்களி டம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு 80சதவீதம் உள்ளது.

மதிமுக 90 சதவீதம் வெற்றி பெறும். இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போதுமானதாக இல்லை. திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளோம். நாங்கள் கடந்த எட்டு மாதத்தில் முதல்வர் செய்த சாதனைகளையும் கடந்த ஆட் சியில் செய்யத் தவறிய செயல்களை யும் கூறி வாக்கு சேகரிக்க உள்ளோம்.

கடந்த ஆட்சியில் 5 வருடங்க ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத் தப்படாததால் மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது. உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி தமிழகத்திற்கு வரவில்லை.

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு செய்தது சாத்தியப்படாது. உடை அணிவது அவர வர் உரிமை ஹிஜாப் அணிவது பல ஆண்டு காலங்களாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் ஒன்று.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூயஸ் குடிநீர் திட்டத்தை எதிர்க்கிறேன். அதேசமயம் பல பணிகள் இதில் நிறைவேற்றப்பட்டதால் இதனை தற்பொழுது நிறுத்துவது என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நீட் தேர்வினால் பல அரசுப் பள்ளி மாணவர்கள், மலைவாழ் மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குச் சென் றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அது தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு காரணமாக தான் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிக்குச்சென்றார்களே தவிர நீட்தேர் வினால் அல்ல அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குப் போகக்கூடாது என்ற கொள்கை யைத்தான் பாஜக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img