Homeபிற செய்திகள்போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு, மதுரை எஸ்.பி. வாழ்த்து

போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு, மதுரை எஸ்.பி. வாழ்த்து

42 வது தேசிய மாஸ்டர் சாம்பி யன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்துகொண்ட சிதம்பரம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், தங்கப் பதக்கமும், தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

அதேபோல், முருகேசன் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், ராஜா, ஈட்டி எறிதல் போட்டியில், தங்கப் பதக்கமும் வட்டு எறிதல் போட்டி யில் வெண்கல பதக்கமும் பெற்றார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கமும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் பெற்றார்.

மதுரை மாவட்ட காவல் துறை யைச் சேர்ந்த பதக்கம் பெற்ற நால்வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

அவர்களை கண்காணிப்பாளர் பாராட்டிய தோடு வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img