பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க நேற்று பொம்மிடி ரயில் நிலையம் முன், பொ.மல்லாபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கைகழுவுதல் மற்றும் முகக்கவசம் அணி வதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பேரூராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலித்தும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.நாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கௌரிசங்கர், பொ.மல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ ரசன், காவல் ஆய்வாளர் சேகர், சுகாதாரஆய்வா ளர் வினோத், கிராம செவி லியர்கள், வணிக சங்கத்த¬ லவர் ஆசாம்கான், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



