கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர் கள் சங்க மகாசபை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக ஆர்.கோபால கிருஷ்ணன், செயலாளராக சுப்பையா அய்யப்பன், பொருளாளராக கணே சபிரசாத், துணை தலைவர்களாக பி.ரவி, கனகசபாபதி அண்ணா துரை, கே.பி.எஸ்.ராஜேஷ், துணை செயலாளர்களாக ராஜேஷ்குமார், ரமேஷ் சுரேஷ் லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் கவுரவ ஆலோசகர்களாக நாகராஜ், வெங்கடாசலம், சந்தோஷ் பாலசுப்பிம ணியம், கவுரி மனோகாரன் ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர் .கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த சங்கம் 1975ம் ஆண்டு கே.பி.எஸ். அவர்களால் தொடங்கப்பட் டது. இன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சமுதாய மக்கள் ஒற்றுமைக்காகவும் வேலைவாய்ப் புகளை ஏற்படுத்தவும், இந்த சங்கம் பாடுபடும். வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ள சமூக மக்களுக்கு அரசு உதவிகள் கிடைக்க சங்கம் பாடுபடும்.
இந்த சங்கத்திற்கு இதுவரை 320 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடை பெறும். மேற்கண்டவாறு அவர் கூறினார். முன்னதாக கூட்ட நிகழ்வை ராஜேஷ் தொகுத்து வழங்கினார்.



