கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் ஆகிய பகுதிகளில் நடை பெற்றுவரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் வளர்ச் சித் திட்டப்பணிகளான சாலைகள் மற்றும் மேம்பாலப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், தே சிய நெடுஞ்சாலை எண்.67-ல் கி.மீ.362/790 முதல் கி.மீ.364/555 வரை மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பு வழியாக மேம்பாலம் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பாலம் 658 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.67- ல் கட்டப் படும் நான்கு வழி மேம்பாலம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பித்து லிவிகீ சந்திப்பு, பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பு, வண்ணான் கோவில் சந்திப்பில் முடிகிறது.
இப்பாலத்தினால் மூன்று சந்திப் புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடி யும். இப்பாலத்தின் 80 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் கி.மீ.352/320 – 352/990 வரை மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது.
தேசிய நெடுஞ்சாலை எண் .67 ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ஜான் பாஸ்கோ சர்ச்சில் ஆரம்பித்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, கோவை வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது.
இப்பாலத்தினால் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப் பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளி தாக செல்ல முடியும். இப் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், பெரியநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றியம், கதிர்நாயக்கன்பாளையம், கவுசிகா ஓடை கிளை வாய்க்காலில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொ றியாளர் சமுத்திரக்கனி, பெரி யநாயக்கன்பாளையம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



