fbpx
Homeபிற செய்திகள்பெண் பணியாளர்கள் நலன், மேம்பாடு கருத்தரங்கு

பெண் பணியாளர்கள் நலன், மேம்பாடு கருத்தரங்கு

கோவை கேர் டி அமைப்பும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய மும் இணைந்து பெண் பணியாளர்கள் நலன் மற் றும் மேம்பாடு குறித்த மாநில அளவிலான கருத் தரங்கை நடத்தியது.

இதில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி பேசும்போது, தமிழகத்தில் 8 கோடி மக்களில் 2 கோடி பெண்கள் பணிக்கு செல்கின்றனர்.

அவர்கள் பணியிடத்தில் எதிர் கொள்ளும் பாலியல் துன் புறுத்தல்கள், குடும்ப வன்முறைகள் ஏற்படுதல் போன்றவை குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பி.கீதா நடராஜன் பேசும் போது, மாவட்டம் விட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, 18 மாவட்டங்களில் 28 தங்கும் விடுதிகளை பயன்படுத்திக் கொள்ள குறைந்த கட்டணம் மட்டுமே வசூ லிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஆலோசகர் காயத்ரி ஜெகன்நாதன் பேசும்போது, பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களே பிரச்சனைகள் தான். வறுமை மட்டும் அல்ல. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 418 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பணியி டத்தில் போதுமான விழிப் புணர்வு தேவை என்றார்.

கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பி.தங்கமணி பேசும்போது, பெண்களுக்கான உரிமை கள் வழங்கினாலும், அவர் கள் அதனை போராடித் தான் பெற வேண்டி உள்ளது. ஒருங்கிணைந்த மகளிர் உதவி எண் 181, முதியோர் உதவி எண் 14567 போன்ற அரசின் நலத்திட்டங்களை பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பயிற்சியாளர் ஜே.ரேவதி பேசும்போது, நல்ல தொடுதல், தீய தொடுதல் போன்றவற்றை அணுகுவதை விட தொடு தலே கூடாதென்று அறி வுரை வழங்கினார்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை யத்தின் சட்ட உதவிகள் வழக்கறிஞர் எம்.ஜே.அபி ராமி, கேர் டி இயக்குநர் சி.மா.பிரிதிவிராஜ் ஆகி யோர் பேசினர்.கேர் டி பெண்கள் பயிற்சி ஒருங்கி ணைப்பாளர் பி.லீனா ஜஸ்டின் வரவேற் றார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.மோத்திராஜ் கருத்தரங் கின் நோக்கத்தை வலியுறுத் தினார். பொள்ளாச்சி ஒன்றிய சமூக பணியாளர் எஸ்.பிரீஜா நன்றி கூறினார்.
கேர் டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ப.மெல்வின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img