fbpx
Homeபிற செய்திகள்பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.


ஊட்டி மெயின் ரோட்டில் எம்.கே.ஜி பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் வி.தங்கமணி தலைமையில் மாவட்ட பொது செயலாளர் மி.ரஹமத்துல்லா, ஆர்.டி.ஐ. மாவட்டத் தலைவர் இமாலயா முன்னிலை வகித்தனர்.


அன்னூர் ரோட்டில் உள்ள கேஎம்கே பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நகர முன்னாள் கவுன்சிலர்கள் நாகன் புருஷோத், முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராபின், நகர எஸ்சி எஸ்டி தலைவர் துரைசாமி மற்றும் நகர நிர்வாகிகள் ரகுராமன், கலை புயல் கணேஷ், வார்டு தலைவர்கள் காளியப்பன், சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img