fbpx
Homeபிற செய்திகள்பெங்களூரு சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெங்களூரு சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் பொறியியல் செயல்முறை மேம்பாட்டை செயல்படுத் துவதற்காக, கோவை வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பெங்களூரு, சர்வேதேச விண்வெளி உற்பத்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணஸ்வாமி தலைமை வகித்தார் .

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்ட பின் விண்வெளி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சீனி வாசன் பேசுகையில்,தொழில் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஒன்றிணைந்து, வரும் காலகட்டங்களில் ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடுகளை செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் தீர்வு காண முயற்சி மேற் கொள்ளப்படும்.

இம்முயற்சி பயன்பாட்டுக்கு வரும்போது, பொறியியல் உற்பத்தி செயல்முறையினை உலகத் தரமிக்க செயல்பாடுகளை கொண்டு பல சாத னைகளை செய்ய உறுதுணையாக இருக்கும்.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வுகளை கொண்டு, செயல்முறை வளர்ச்சியினை கையாள்வதின் மூலம் பல வழிகளில் நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தி திறனை மேம்படுத்தலாம் என்றார்.

2010ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனம், சுமார் 130 விண்வெளி மற்றும் நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.

இங்கிலாந்து நாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் செயல்படும் இந்நிறுவனம் தற்போது இருக்கும் சிறப்பு தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய வல்லமை கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு புரிந்துணர்வு சிறப்பம்சம் பற்றி குறிப்பிடுகையில், மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் துறைஅனுபவம் எவ்வாறு கிடைக்கப்பெறும் என்பதையும் விளக்கினார்.

படிக்க வேண்டும்

spot_img