கிருஷ்ணகிரி பழைய பேட்டையில், 97 ஆண்டுகள் பழமையான புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில், புனித இஞ்ஞாசியாரின் தேர்த்திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.
ஜெர்மனி நாட்டின் போர்படைத் தளபதியாக இருந்த லோயாலோ இக்னேஷியஸ், ஓய்வு நாளில் பைபில் படித்துக் கொண்டிருந்த போது மனம் மாற்றம் ஏற்பட்டு, போர்ப்படை தளபதி பணியை விட்டுவிட்டு, துறவறம் பூண்டு மக்களுக்காகவே சேவைகள் செய்து காலமானார்.
பின்னர், உலக கத்தோலிக்க போப்பாண்டவர் மூலம் லோயாலோ இக்னேஷி யஸூக்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.
அவரின் நினைவாக, கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் 97 ஆண்டுகளுக்கு முன், புனிதர் இஞ்ஞாசியார் பெயரால் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது.
அந்த ஆலயம், கடந்த 2017-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில், புனித இஞ்ஞாசியார் தேர் திருவிழா கடந்த 29ல் கொடி யேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நிறைவு நாளில் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியாரின் திருத்தேர் அருள்தந்தை இராபர்ட் அவர்களால் மந்தரிக்கப்பட்டு, ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய தேர்பவனி, பழையபேட்டை, குப்பம் ரோடு, மீன் மார்க்கெட் வழியாக சென்று, மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம் மற்றும் சுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.



