கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
பள்ளியின் மூத்த ஆசிரியர் இளங்கோ தேசிய கொடியை ஏற்றிவைத்து ‘இந்தியாயும் இளைஞர்களும் “ என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்.
பள்ளியின் தலைமையாசிரியை “சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளை பற்றி குறிப்பிட்டார்.
முன்னாள் மாணவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு “எனது பார்வையில் இந்தியா “என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சுதந்திர தினத்தில் பிறந்த மாணவர் சுதந்திர பொம்மன் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். விழாவில் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்துக்கொண்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் செய்திருந்தார்.



