ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் தலைமையில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்,
முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (கூடுதல் பொறுப்பு), இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பாக, அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பேசியதாவது:
தமிழ்நாட்டில், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மி மற்றும் மிமி- கீழ் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மிமிமி-ன் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.
நடப்பாண்டிற்கான சாலை கள் மற்றும் பாலங்களுக்கான பிரேரணைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் வீடுகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும். இத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு உரித்தான நிதியினை விரைந்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



