fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி பிறந்த தின விழா: கோவையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி...

பிரதமர் மோடி பிறந்த தின விழா: கோவையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று (செப்.17), கோவையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோ திரம் அணிவித்து பாஜகவினர் கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் விழாவை பாஜக தொண் டர்கள் கொண்டாடினர்.

கோவையில் பல்வேறு இந்து அமைப் பினர், நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானங்கள் வழங்கி விழா வை சிறப்பித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட பாஜக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 5 ஆண், 5 பெண் என 10 குழந் தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு, பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.நந்த குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மதன் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img