fbpx
Homeபிற செய்திகள்பாலமலையில் பசுமை வீடுகள் கட்ட பூமிபூஜை

பாலமலையில் பசுமை வீடுகள் கட்ட பூமிபூஜை

பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே பாலமலையில் வசிக்கும் ஆசிவாசிகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரும் பணியை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பாலமலையில் மாங்குழி,பசுமணி ,பசுமணிப்புதூர் உள்பட ஏழுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு 350 ஆதிவாசி குடும் பங்கள் வசிக்கின்றன.

இவர்கள் வசிக்கும் வீடுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் இவற்றை பசுமை வீடுகள் திட்டத் தின்கீழ் கட்டித்தர அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் மாங்குழி கிராமத்தில் நடந்த பூமிபூஜைக்கு பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் நர்மதா துரைசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பி.ஆர். ஜி.அருண்குமார் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆதிவாசிகளுக்கு காய்கறித் தொகுப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுவின் முன்னாள் தலைவர் கோவனூர் துரை சாமி,ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி,குருடம்பாளையம்,அசோகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் டி.ரவி,ரமேஷ் ,எண்.4,வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.என்.ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img