fbpx
Homeபிற செய்திகள்பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை அடுத்த கோவில்பாளையம் குமரன் மஹாலில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை மாவட்ட தலைவர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் தீர்மானத்தை வாசித்து விளக்கவுரை ஆற்றினார்.

கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

புதிய கிராம நிர்வாக அலுவலர் களுக்கு நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும், கிராம எல்லைகளை மறுவரை செய்து அரசு புதிய கிராமங்கள் உருவாக்க வேண்டும் என அரசை வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலைவாணி சிவப்பிரகாஷ், உதயகுமார், கோவை மாவட்ட செயலாளர் ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img