Homeபிற செய்திகள்பண்ணைக் கருவிகள் வழங்க மாநில நிதி ரூ.49.41 லட்சம் ஒதுக்கீடு 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2134...

பண்ணைக் கருவிகள் வழங்க மாநில நிதி ரூ.49.41 லட்சம் ஒதுக்கீடு 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2134 வேளாண் கருவிகளின் தொகுப்பு – மதுரை மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் மூலம் விவசாயி களுக்கு வேளாண் பண்ணை கருவிகளை வழங்குவதற்கு மாநில நிதியில் இருந்து தமிழக அரசு மதுரை மாவட்டத்திற்கு ரூ.49.41 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இவற்றில் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் 2134 வேளாண் கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

அதனடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் உற்பத்தியை அதிகரித்திட விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான / பகுதி வாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

உற்பத்தி அதிகரிப்புக்கு
உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.

அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை.

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து உணவு தானியப் பயிர்கள் உட்பட நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், சமையலுக்குப் பயன்படும் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் போன்ற வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படும் மற்ற பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரித்திடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளில்
வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வள வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் 2021-22-ம் ஆண்டில் 2,500 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து மொத்தம் ரூ.1245.45 கோடி ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக மாநில அரசு கூடுதலாக நிதி ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 58 பஞ்சாயத்துகளில் நடைபெறுகிறது.

தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்
இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப் பொருட்களை மதிப்புகூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் புதிய பட்டா / பட்டா மாறுதல் செய்து வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் முக்கிய பணிகளாக உள்ளன.

இத்திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தித்துறை, கைத்தறி, கைத்தறித் திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

தற்சமயம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பண்ணை கருவிகளை வழங்குவதற்கு மாநில நிதியில் இருந்து தமிழக அரசு மதுரை மாவட்டத்திற்கு ரூ.49.41 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றில் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் 2134 வேளாண் கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

ஒரு தொகுப்பில் தலா 1 எண் கடப்பாறை, மண்வெட்டி, களைகொத்தி, மண்சட்டி மற்றும் 2 எண்கள் கதிர் அறுப்பான போன்ற வேளாண் கருவிகள் உள்ளன. பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும், பட்டியல்பிரிவு விவசாயிகளுக்கு 90% மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

ஒரு தொகுப்பின் முழு விலை ரூ.2297 ஆகும். மானியத்தில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.2193-ம் பட்டியல் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.2632-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

“வீடு தேடி வந்த அலுவலர்கள்”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த எம். பதம்பநாபன் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக 2.4 ஏக்கர் நிலம் உள்ளது. நான் எனது வயலில் விவசாயம் செய்து வருகிறேன்.

வயிலில் களைகள் எடுக்கவும் மற்றும் பிற தேவைகளுக்காக உபகரணங்கள் கூடுதலாக தேவைப்பட்டன. கலைஞரின் திட்டத்தின் கீழ் இது போன்ற உபகரணங்களை மானிய விலையில் வழங்குவதாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரிடையாக வந்து அறிவித்தனர்

. உடனடியாக விண்ணப்பம் செய்வதற்கும் எங்களுக்கு உதவினர். விண்ணப்பித்த வெகுசில நாட்களிலேயே கடப்பாறை, மண்வெட்டி, களைகொத்தி, மண்சட்டி, 2 எண்கள் கதிர் அறுப்பான் போன்ற வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்பை மானிய விலையில் கிடைக்கப் பெற்றேன்.

எங்களைத் தேடி வந்து விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தி நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
இ.சாலி தளபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மதுரை.
ம.கயிலைச் செல்வம்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.

படிக்க வேண்டும்

spot_img