இந்தியாவின் முன்னணி தனியார் பொதுக் காப்பீட்டு நிறு வனங்களில் ஒன்றான பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், தனித்துவமான ‘ஹெல்த் ப்ரைம்’ ரைடரை அறிமுகப் படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் மற் றும் பர்சனல் விபத்து பாலிஸியுடன் இந்த ரைடரைப் பெறலாம். முழுமையான சுகாதாரத் தீர்வுகளை வழங்குவது மட்டுமே இந்த ரைடரை அறிமுகப்படுத்தியதன் நோக்கமாகும்.
இந்த ரைடரின் கீழ் தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக, பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட் உடன் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இதன் பலனாக, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய 2,500-க்கும் மேற்பட்ட ஆய்வக சங்கிலிகள் மற்றும் 90,000 மருத்துவர்களின் விரிவான நெட்வொர்க்கைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
டிஜிட்டல் மயமாக் கலின் சக்தியால் செழித்து வளரும் நாட்டில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நிலப்பரப்பை மறுவரையறை செய்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக இருக்கும்.
இந்த சலுகை குறித்து கருத்து தெரிவித்த பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ தபன் சிங்கேல் பேசும்போது, “வாடிக்கையாளர்களின் தற்போதைய தேவைகளை மட்டும் கவனித்துக்கொள்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அவர்கள் தயாராக இருக்கவும் உதவும் எண்ட் டு எண்ட் இன்சூரன்ஸ் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் எப்போதும் முன்னோடியாக இருக்கிறோம்” என்றார்.
ஹெல்த் பிரைம் ரைடர் ஆனது வாடிக் கையாளர்களுக்கு 4 முக்கிய திட்டங்களைத் தொகுத்துள்ளது. முதலாவது, டெலி-கன் சல்டேஷன் கவர் ஆகும்.
இதில் நோய்/காயத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், சேவை வழங்குநரின் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் மருத்துவருடன் வரம்பற்ற ஆலோசனைகளைத் தேர்வு செய்யலாம்.
இரண்டாவது, டாக்டர் கன்சல்டேஷன் கவர். இதில், சேவை வழங்குநரின் பரிந்துரைக்கப்பட்ட நெட்வொர்க் மையங்கள் அல்லது அதன் நெட் வொர்க்கிற்கு வெளியே ஏதேனும் நோய்/காயம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் மருத்துவரை நேரில் அணுக முடியும். மூன்றாவது, இன் வெஸ்டிகேஷன் கவர் என்பதாகும்.
இதில், பரிந்துரைக்கப் பட்ட நெட்வொர்க் மையங்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நெட் வொர்க்கிற்கு வெளியே நோயியல் அல்லது கதிரியக்க செலவுகளுக்கான விசாரணைகளைப் பெறலாம். இறுதியாக, வருடாந்திர தடுப்பு சுகாதாரப் பரிசோதனை கவர்.



