fbpx
Homeபிற செய்திகள்நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கோவை மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டுக்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சுமார் 2155 ஹெக்டரில் மானியம் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் றிவிரிஷிசீ-விமி இணையதளத்தில் தங்கள் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையத்தில் பதிவு செய்திட இத்திட்டத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான ஆவணங்களான சிட்டா அடங்கல் திவிஙி மற்றும் இணைய வழி சிறு குறு விவசாயி சான்று ஆகியவற்றை வழங்கிடும் பொருட்டு வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியோர் ஒருங்கிணைந்து வரும் 24-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகிய நாட்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் (ஃபிர்கா) அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.


மேற்கண்ட நாட்களில் இணையவழியில் சான்றுகள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் முன்பே பதிவு செய்ய வேண்டும். முகாம் நாட்களில் சான்றுகளை பெற்றுக் கொள்ள உரிய ஏற்பாடுகள் வருவாய் துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.


இவ்வாய்ப்பினை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயனடையலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img