fbpx
Homeபிற செய்திகள்நலவாரிய அடையாள அட்டை வழங்கியதற்கு திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் நன்றி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்!

நலவாரிய அடையாள அட்டை வழங்கியதற்கு திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் நன்றி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்!

நலவாரிய அட்டை வழங்கிய தமிழக அரசுக்கு திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் போது, மாவட்டம் தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் நல வாரிய அட்டைகள்” வழங்கி, அவர்களின் வாழ் வாதாரம் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

நலவாரிய அட்டை பெற்றுள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விபத்து உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச் சடங்கு உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தில் சேர்ந்து நலவாரிய அட்டைகள் பெற விரும்புபவர்கள் 18 வயது நிறைவு பெற்றவராகவும், 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல்வேண்டும்.

பதிவு செய்த அட்டைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அடையாள அட்டைகள் தவறும் பட்சத்தில் ரூ.20 செலுத்தி நகல் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாரிய உறுப்பினர்கள் திருமணமான பின்பு அசல் விண்ணப்பத்தில் நியமனதாரரை மாற்ற வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வாரிய உறுப்பினர் இயற்கை மரண நிதி உதவி கோரும் விண்ணப்பத்துடன் அசல் அடையாள அட்டையை வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நிதி உதவி கோரும் ஒவ்வொரு நிகழ்விலும் அசல் அடையாள அட்டையை கேட்பு மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பெண் என்பதில் பெருமை
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கொம்பன் என்பவரது மனைவி மீனாட்சி கூறியதாவது:

எங்களது குடும்பம் ஏழ்மையானது. தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் பதிவு செய்து தமிழக அரசின் நலவாரிய அட்டை கிடைக்கப் பெற்றேன். இந்த அட்டையைப் பெற்ற பின்பு தான், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த திட்டத்தில் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை போன்றவற்றை தமி ழக அரசு அறிவித்துள்ளதை கண்டு, பெண்ணாய் பிறந்தமைக்கு பெருமைப்படுகிறேன்.

இந்த திட்டங்களை என் போன்ற ஏழை பெண் களிடம், தமிழக அரசு மகளிருக்காக அறிவித்துள்ள நலத்திட்டங்களைப் பெறுவதற்கு எடுத் துரைப்பேன். நல வாரிய அட்டைகள் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு, என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய் வீட்டு சீதனம்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணி யாற்றி வரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி தங்கம்மாள் கூறியதாவது: ஏழ்மையான குடும் பத்தைச் சேர்ந்தவள்.

தமிழக அரசின் பெண்க ளுக்கான நலத்திட்ட உதவிகள் பற்றிய அறிவிப்பை அறிந் தேன். உடன் பணபுரிபவர்களிடம் கேட்டு, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் பதிவு செய்து, நலவாரிய அட்டை கிடைக்கப் பெற்றேன்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றி தெரிந்து கொண்டேன். தாய்மை உள்ளம் கொண்ட முதல்வருக்கு, அனைத்து தமிழக பெண் கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.

படிக்க வேண்டும்

spot_img