fbpx
Homeபிற செய்திகள்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: மனுதாக்கல் செய்ய திரண்ட...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: மனுதாக்கல் செய்ய திரண்ட வேட்பாளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடி வடையும் நிலையில், நாளை மறுநாள் சனிக்கிழமை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரேநாளில் மட்டும் 7,590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அலை மோதியபடி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூ ராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மா தம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இத்தேர்தலில் 8 முனைப்போட்டி நிலவு கிறது. ஆனாலும் தி.மு.க., அ.தி.மு.க. இடையே நேரடி யாக பெரும்பாலான பதவிகளுக்கு போட்டி நிலவுகிறது. இரு கட்சி களும் பெரும்பாலான வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளி யிட்ட நிலையில்,வேட்பு மனு தாக்கல் நேற்று அதிக அளவில் இருந்தது. கொரோனாகட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தர விட்டபோதும், ஆங்காங்கே வேட்பா ளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் வந்து மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலு வலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 7,590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத னால் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 10,153 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,672 பேர் மாநகராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும், 3,017 பேர் நகராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும், 5,464 பேர் பேரூராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 175 ஆண்கள், 135 பெண் கள் என மொத்தம் 310 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது வரை சென்னையில் 241 ஆண்கள், 177 பெண் கள் என மொத்தம் 418 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தாம்பரத் தில் நேற்று 91 பேர் மனு தாக்கல் செய்திருப்பதால் இதுவரை மனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. ஆவடி மாநகராட்சியில் நேற்று 29 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை அங்கு 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மாநிலம் முழு வதும் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மும்முரமாக நடைபெற்றது.

இன்றும் திமுக, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினார்கள்.

அதிகளவில் இன்று ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் திரண்டனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய அலுவலகங்கள் இன்று களைகட்டின. நேற்றை விட இன்று கூடுதலாக மனுதாக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img